search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிமுத்தாறு அருவி"

    • கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
    • ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கு தனி தனியாக தடுப்பு கம்பிகள், காங்கிரீட் அமைப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலமான மணிமுத்தாறு அருவியில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினமும் குளித்து சென்றனர்.

    இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    இதில் மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்கும் தடாகம், தடுப்பு கம்பிகள் உள்ளிட்டவை கடும் சேதமாகின. தொடர்ந்து வனத்துறை சார்பில் மணிமுத்தாறு அருவியில் ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கு தனி தனியாக தடுப்பு கம்பிகள், காங்கிரீட் அமைப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    தொடர்ந்து தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று முதல் பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை வனவிதிகளுக்கு உட்பட்டு குளிக்க வனத் துறையினர் அனுமதித்தனர்.

    அதன்படி வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் வழக்கத்தைவிட ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். 

    • கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
    • மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதியில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் ஆண்டுதோறும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது வழக்கம்.

    இந்த அருவிக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதியில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.

    இதனால் கடந்த 31-ந்தேதி மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது படிப்படியாக வெள்ளப்பெருக்கு குறைந்து வந்ததால், இன்று முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

    16 நாட்கள் தடைக்கு பின்னர் இன்று முதல் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
    • கடந்த 31-ந் தேதி மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதியில் அவ்வப்போது கனமழை பெய்துள்ளது. இதனால் கடந்த 31-ந் தேதி மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து 5-வது நாளாக  இன்று அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தொடர்ந்து 5-வது நாளாக தடை விதித்துள்ளனர். எனினும் அருவியை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கியுள்ளனர்.

    வெள்ளப்பெருக்கு குறைந்தவுடன் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். 

    • மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவி பகுதியில் நேற்று கனமழை பெய்தது.
    • சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    நெல்லை:

    அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவி பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதனால் இன்று அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் தற்போது சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆனால் அருவியை பார்வையிட அனுமதி வழங்கி உள்ளனர்.

    • நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
    • பள்ளி விடுமுறை நாட்களாக இருந்ததால் மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா வந்த பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

    செங்கோட்டை:

    தமிழக-கேரள எல்லை பகுதியான செங்கோட்டை அருகே உள்ள ஆரியங்காவு பாலருவியில் சில நாட்களாக தண்ணீர் அதிகரித்து காணப்பட்டது.

    இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாலருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. உடனடியாக அங்கு குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அப்புறப்படுத்தினர். தண்ணீர் வரத்து சீரான பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் பாலருவிக்கு குளிக்க சென்ற ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் மீண்டும் குற்றாலத்திற்கு புறப்பட்டனர்.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இன்றும் அருவியில் நீர்வரத்து குறையாததையடுத்து 3-வது நாளாக மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு அம்பாசமுத்திரம் வனத்துறையினர் தடை விதித்தனர்.

    இதையடுத்து பள்ளி விடுமுறை நாட்களாக இருந்ததால் மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா வந்த பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா வந்த பயணிகள் தடை விதிக்கப்பட்டு பார்ப்பதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அருவியில் நீர்வரத்து சீராகும் வரை குளிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவிக்கரையில் கடந்த மாதம் 29-ந்தேதி முதல் நேற்று வரை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். அங்கு பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்ததை தொடர்ந்து இன்று காலை முதல் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த தகவலை களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப் பிரியா தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் அருவியை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

    • நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை உள்ளது.
    • நடுத்தர மக்கள் மணிமுத்தாறு அருவியில் குளிப்பது பெரும் கனவாகிவிட்டது. ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை உள்ளது. இங்கு செல்லும் வழியில் மணிமுத்தாறு அருவி உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருவார்கள்.

    வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவி மற்றும் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளுக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் மணிமுத்தாறு அருவி மற்றும் மாஞ்சோலை பகுதிகளுக்கு சொந்த வாகனத்தில் செல்பவர்களோ, வாடகை வாகனத்தில் அதிகப்படியான பணம் செலவழிக்க முடிந்தவர்கள் மட்டுமே செல்லும் நிலை மட்டுமே தற்போது நிலவி வருவதாக நடுத்தர மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

    தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் காரணத்தால் மாஞ்சோலை எஸ்டேட் பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். ஆனால் சுற்றுலா செல்லும் பயணிகள் வனத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சூழல் சுற்றுலா வாகனத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செல்ல ஒரு நபருக்கு ரூ. 350 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    இத்தொகை அரசு பஸ் கட்டணத்தை விட 10 மடங்கு அதிகமாக இருப்பதாகவும், சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பெரும் சவாலான தொகையாக இது இருப்பதாக அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

    அருவிக்கு செல்ல மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோக்களில் செல்ல அனுமதி இல்லை. சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் அல்லது வாடகைக்கு கார் எடுத்து செல்பவர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நடுத்தர மக்கள் மணிமுத்தாறு அருவியில் குளிப்பது பெரும் கனவாகிவிட்டது. ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விட்டது. பணம் படைத்தோருக்கு மட்டுமே அருவிக்கு செல்ல முடியும் என்ற நிலை வந்துள்ளது. இதனால் பணக்கார அருவியாக மணிமுத்தாறு அருவி மாறிவிட்டது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • தென்காசி மாவட்டத்தில் ஆய்குடி, கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகபட்சமாக 9.50 மில்லிமீட்டர் மழை பெய்தது.
    • கடனா மற்றும் ராமநதி அணை பகுதிகளில் தலா 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை:

    வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது.

    அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதலே பரவலாக பெய்து வருகிறது. நேற்று மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மாஞ்சோலை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல களக்காடு தலையணையிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் தலையணை மற்றும் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்றும் மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் குறையவில்லை. இதனால் இன்று 2-வது நாளாக அருவி பகுதிக்கு செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதேநேரத்தில் தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் இன்று அங்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்படுவதாக வனசரகர் பிரபாகரன் அறிவித்துள்ளார். இதையடுத்து நேற்று மூடப்பட்ட தலையணை நுழைவு வாயில், கட்டண வசூல் மையம் மற்றும் சோதனை சாவடி உள்ளிட்டவை இன்று காலை திறக்கப்பட்டது.

    மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட இடங்களில் 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. மாஞ்சோலையில் 32 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 40 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    அம்பை, சேரன்மகாதேவி, முக்கூடல், நாங்குநேரி, நெல்லை, பாளை, கன்னடியன் கால்வாய், களக்காடு, கொடுமுடியாறு அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழை பெய்யவில்லை.

    தென்காசி மாவட்டத்தில் ஆய்குடி, கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகபட்சமாக 9.50 மில்லிமீட்டர் மழை பெய்தது. கடனா மற்றும் ராமநதி அணை பகுதிகளில் தலா 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கருப்பாநதியில் 7 மில்லிமீட்டரும், தென்காசியில் 6 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று மாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இன்று விடுமுறை தினம் என்பதால் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    • தென்காசி மாவட்டத்தில் 2 தினங்களாக மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ளது.
    • மக்கள் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி இல்லை என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக இணை இயக்குனர செண்பக பிரியா அறிவித்துள்ளார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நேற்று இரவு முதல் இடைவிடாத சாரல் மழை பெய்து வந்தது.

    இதன் காரணமாக சில தினங்களாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து இல்லாததால் வறண்ட நிலை காணப்பட்டது. தற்போது இந்த மழையால் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கும் நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

    மாஞ்சோலை பகுதிகளில் கடந்த 2 தினங்களாக தொடர்ந்து மழை பெய்வதால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதன் காரணமாக பொதுமக்கள் குளிக்க வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மாவட்டத்தில் 2 தினங்களாக மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி இல்லை என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக இணை இயக்குனர செண்பக பிரியா அறிவித்துள்ளார்.

    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்றும் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக திடீரென பரவலாக மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக சேரன்மகாதேவி, களக்காடு, மூலக்கரைப்பட்டி, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக அம்பை, ராதாபுரத்தில் தலா 15 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 10 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை பாபநாசம் அணை பகுதியில் 17 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேர்வலாறில் 6 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மாநகர பகுதியில் பெய்த பரவலான மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. பெரும்பாலான சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளித்தது.

    இந்நிலையில் இன்று காலை முதல் வெயில் அடிக்க ஆரம்பித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சீரானது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகளுக்கு அங்கு அனுமதி வழங்கப்படவில்லை. இன்றும் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்றும் பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க போலீசார் தடை விதித்தனர். நேற்று மாலையில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் சீராக கொட்ட தொடங்கியது.

    இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மெயின் அருவியில் ஓரமாக நின்று குளித்து மகிழ்ந்தனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக கடனா அணை பகுதியில் 20 மில்லிமீட்டரும், ராமநதியில் 17 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. சங்கரன்கோவில், சிவகிரி, தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    • நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.
    • சென்னை, தூத்துக்குடி மற்றும் வெளியூர்களில் இருந்து நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக கனமழை பெய்வதால் கடையம் அருகே உள்ள ராமநதி மற்றும் கடனா அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி நேற்று 6 அடி நீர்இருப்பு அதிகரித்த நிலையில் இன்று மேலும் 2 அடி உயர்ந்துள்ளது. இதேபோல் 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணை நீர்மட்டம் இன்று மேலும் 3 அடி உயர்ந்து 61 அடியை எட்டி உள்ளது.

    36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை 34.50 அடியை எட்டி உள்ளது. இதேநிலையில் மழை பெய்தால் இன்று இரவுக்குள் அந்த அணை தனது முழு கொள்ளளவை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணை பகுதியில் 18 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 17 மில்லிமீட்டரும், கடனா அணை பகுதியில் 15 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டது. பாபநாசம், சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் அந்த அணகளுக்கு வினாடிக்கு 1388 கனஅடி நீர் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அந்த அணைகளில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1204.75 கனஅடி நீர் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 425 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை.

    மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, மூலக்கரைப்பட்டி, பாளை உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. பெரும்பாலான இடங்களில் நாற்று நடவு பணிகள், தொழி அடித்தல் உள்ளிட்ட பணிகளில் பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர்.

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை பெய்து வருகிறது. ஊர் பகுதிகளை விட உள்மலை பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் களக்காடு தலையணையில் நேற்று காலை தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தப்படி தண்ணீர் செல்கிறது.

    இதனைதொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் தலையணையில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வன சரகர் பிரபாகரன் தலைமையில் வனத்துறை ஊழியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சுற்றுலா பயணிகள் தலையணையை சுற்றி பார்க்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. சென்னை, தூத்துக்குடி மற்றும் வெளியூர்களில் இருந்து நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் தலை யணையை சுற்றி பார்த்து விட்டு, திரும்பி சென்றனர்.

    தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் இன்று 2-ம் நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் பெரும்பாலான இடங்களில் உப்பளங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. மாநகர பகுதியில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது.

    சூரங்குடியில் அதிகபட்சமாக 20 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருச்செந்தூரில் 18 மில்லிமீட்டரும், கழுகுமலையில் 13 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மேலும் குலசேரகப்பட்டினம், காயல்பட்டினம், வைப்பார், வேடநத்தம், காடல்குடி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் மணிமுத்தாறு அருவிக்கு வந்து ஆனந்தமாக குளித்து செல்வார்கள்.
    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    நெல்லை:

    தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அருவிகளில், நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியும் ஒன்றாகும். பாபநாசம் அகஸ்தியர் அருவி போன்று ஆண்டுதோறும் இந்த அருவியிலும் தண்ணீர் விழுவது வழக்கம்.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மணிமுத்தாறு அருவிக்கு வந்து ஆனந்தமாக குளித்து செல்வார்கள்.

    இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 15-ந் தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.

    இந்த நிலையில் மலைப்பகுதியில் தற்போது மழை குறைந்தது. அருவிக்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்ததையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×